நான் தமிழில் மிகவும் தேர்ச்சி பெற்ற்வன் அல்ல. இருப்பினும் என்னால் இந்த மடலை தமிழில் எழுதாமல் இருக்க இயலவில்லை. Blog என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை எனக்கு தெரியவில்லை. மடல் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளேன். நான் பல காலஙகளாக கணினியை (Computer) பயன்படுத்தி வருகிறேன். இதுவரை தமிழை அதிகம் பயன்படுத்தவில்லை. இது எனது புது முயற்சி. இந்த மடலை எழுத ஆங்கிலம் - தமிழ் (transliteration software) தட்டச்சை ப்யன்படுத்துகிறேன். இந்த முறையில் ஆங்கில எழுத்துக்களை தட்டி தமிழ் வாக்கியஙகளை உருவாக்கலாம்.
இதற்கு முதலில் தமிழ் தட்டச்சு துணை மென்பொருளை (Transliteration add-on) ஃபயர் ஃபாக்ஸ் உலாவியில் (FireFox Browser) நிர்மாணிக்க வேண்டும். இந்த மென்பொருளை பெருவதற்கு கீழே கொடுத்துள்ள வலை தளத்துக்கு செல்லுஙகள்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994
நான் தட்டச்சுவை நிர்மாணித்த பிறகு கூகுல் (Google) தேடல் பகுதியில் பயன் படுத்தி பார்த்தேன். அதில் ஒரு காட்சியை இங்கு இணைத்தஉள்ளேன். இந்த முயற்சி எனக்கு புது அனுபவம் மட்டுமல்லாது, இனிமையான அனுபவமாகவும் அமைந்தது. பல தமிழ் அன்பர்கள் தமிழை வலை தளங்களில் நிலை நிறுத்த பாடுபடுகிறார்கள். மிகுந்த முன்னேற்றமும் கன்டுள்ளார்கள். அவர்களுக்கு எனது மன்மார்ந்த வாழ்த்துக்கள்.
ப்ல வகை தமிழ் தட்டச்சககள் இருப்பினும், நான் அங்கிலம் - தமிழ் (Transliteration) தட்டச்சு பயன் படுத்துவதன் காரணம், நான ஆங்கில தட்ட்ச்சு பயிறசியில் முன்னமே தேர்வு பெற்றுவிட்டதுதான். இந்த முறையில், மிகவும் விரைவாக என்னால் மடலை உருவாக்க முடிகிற்து. மேலும் பல மடல்களை தர உள்ளேன். மீண்டும் சந்திப்போம்.
பி. கு.: சில வார்த்தைகளை தமிழாக்கம் செய்யும்போது தடுமாறினேன்.
Even at 63 and after retirement, I am willing to learn new things. Presently, I am learning software programming and 3D CAD & graphic operation. My background is mechanical engineering with experience in product support and project managements of MV diesel power stations and earthmoving equipment.
Saturday, November 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
(function()
{var po = document.createElement("script");
po.type = "text/javascript"; po.async = true;po.src = "https://apis.google.com/js/plusone.js";
var s = document.getElementsByTagName("script")[0];
s.parentNode.insertBefore(po, s);
})();
No comments:
Post a Comment